என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பொள்ளாச்சி கொள்ளை
நீங்கள் தேடியது "பொள்ளாச்சி கொள்ளை"
பொள்ளாச்சியில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி-கோவை ரோடு சங்கம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தோடு மைசூர் சுற்றுலா சென்றார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஜெயக்குமாரின் உறவினர் சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் ஜெயக்குமாருக்கும் தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 60). கடந்த 28-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல் உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
வீட்டுக்கு திரும்பிய ரமேஷ்குமார் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மிட்டாய் கம்பெனியின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை திருடி சென்ற மர்நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் பொள்ளாச்சி- கோட்டூர் ரோட்டில் சொந்தமாக மிட்டாய் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கம்பெனியில் காசாளராக வேலை பார்க்கும் சுனிதா வழக்கம் போல கம்பெனியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலையில் கம்பெனியை திறப்பதற்காக வந்தார். அப்போது கம்பெனியின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சுனிதா உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த கல்லாவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சுனிதா, சரவணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்

×

X